130 மில்லியன் பார்வைகளுடன் இலங்கை சிறுவனின் பூக்கள் விற்க்கும் காட்சி சீனாவில்
130 மில்லியன் பார்வைகளை கடந்து சீனாவில் சோஷியல் திராண்டிங்கில் இடம்பிடித்த இலங்கை இளம் இளைஞ்சன்
மயக்கும் புன்னகையுடன்,துடிப்பான ஆற்றலுடன் சுற்றுலா பயணிகளுக்கு பூக்களை விற்பனை செய்யும் இளைஞன். இலங்கையின் கொத்மலை எனும் ஊரில் 17 வயதுடைய மதுஷங்க திலீப் ஆவார்.
10 வயதில் பள்ளிப்படிப்பை கைவிட்ட இவர் பூக்களை விற்று குடும்பத்தை பார்க்கும் ஒருவராக காணப்படுகிறார்.அவரது தந்தையும் தாயும் காய்கறிகள் விற்பனை தொழில் செய்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மதுஷங்கா மலைச்சாலைகளில் சுற்றுலாப் பேருந்துகளை பின்தொடர்ந்து தனது பூக்களை வித்தியாசமான முறைகளில் பயணிகளை கவர்ந்து விற்பனை செய்யும் பழக்கம் உடையவர்.
இப்படியான ஒரு நாளில் சின சுற்றுலா பயணிகளின் பேருந்தை நிறுத்த நிறுத்த முயற்சித்தது வித்தியாசமான ஒன்றாக காணப்பட்டுள்ளது மற்றும் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது . பயணிகள் சென்ற பேருந்தை இடைமறிப்பதற்காக மலைப்பாதைகள் வழியாக நான்கு வெவ்வேறு இடங்களில் இருந்து மதுஷன்க வெளிவருவதை கண்டதாக சீன பயணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பின்னர் அவரின் கைகளில் இருந்த அனைத்து பூக்களையும் அவர்கள் வாங்கியது மட்டுமில்லாமல் மது ஷங்கவின் வித்தியாசமான செயலை வீடியோ பதிவு செய்து அனைவரும் அவர் அவர்களின் சோஷியல் மீடியாக்களில் பதிவேற்றம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தமாக அனைத்து வீடியோ பதிவுகளிலும் சேர்த்து 130மில்லியன்னபார்வைகள் கடந்துள்ளது.
மதுஷன்கவின் வீடியோ பதிவில் ஒன்று பின்வருமாறு..
Google research
Article by_ Ahm Dhilshath
Comments
Post a Comment
Welcome